December 29, 2017
tamil.samayam.com
காதலர் ஆண்ட்ரூவை தன் கணவர் என்று கூறி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை இலியானா.
மும்பையைச் சேர்ந்த ஒரு பாலிவுட் நடிகை இலியானா. இவர் ஒரு தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது பாலிவுட்டில் முழுநேர நடிகையாக உள்ளார்.
இலியானாவும், வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபான் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவரைத் தன் கணவர் எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் இலியானா.