February 9, 2017 tamilsamayam.com
கனடாவில் குடியேற வேண்டும் என கனடா பிரதமர் விடுத்த அழைப்புக்கு ஏ.ஆர்.ரகுமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டின் டொராண்டோ நகருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்றிருந்தார்.இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளை குறிக்கும் வகையில் இசைத் தொகுப்பு ஒன்றை அரங்கேற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டொராண்டோ நகரின் மேயர் ஜான் டிராய்,ஏ.ஆர்.ரகுமான் கனடாவில் குடியேற வேண்டும் என அந்த இசை நிகழ்ச்சியின் மேடையிலேயே அழைப்பு விடுத்தார்.டொராண்டோ மேயரின் இந்த அழைப்புக்கு,தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான்,தமிழ்நாட்டில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
”கனடாவில் குடியேற வேண்டும் என அழைப்பு விடுத்த மேயருக்கு நன்றி.உங்களுடைய அன்பினாலும்,விருந்தோம்பலிலும் நான் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளேன்.நான் தற்போது தமிழ்நாட்டில் என்னுடைய குடும்பம்,நண்பர்கள் மற்றும் மக்களோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன்.நீங்கள் அடுத்த முறை இந்தியா வரும்போது,என்னுடைய கே.எம் இசைப்பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
மேலும் இந்தியா மற்றும் கனடா நாடுகள் இணைந்து இசையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.” என ஏ.ஆர்.ரகுமான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.