January 28, 2017
tamilsamayam.com
ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் சவாரி செய்த சைக்கிள் சுமார் 10 லட்சத்துக்கு ஏலத்தில் சென்றுள்ளது.குங்பூ யோகா படத்தை புரமோட் ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் இந்தியா வந்தார்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக இந்தியா வந்துள்ளார். இவர் கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று புரமோஷன் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு சைக்கிளில் டபுள்ஸ் அடித்தார்கள்.இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே, அந்த சைக்கிள் ஏலம் விடப்பட்டது. இதை ஜாக்கி சான் ரசிகர் ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.