January 4, 2017 tamil.samayam.com
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக எடுக்கப்படுகிறது.
இந்த படத்தை தெலுங்கு சினிமா உலகின் பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் இயக்குகிறார். இதற்கான தலைப்பு கூட தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அம்மா என்ற பெயரிலேயே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாகவும், இதற்கான திரைக்கதை விவாதம் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெலுங்கு சினிமா உலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தயாரிப்பாளர் சிக்கல் காரணமாக, தாசரி நாராயண ராவே இதனை தயாரித்து, இயக்க முடிவெடுத்துள்ளார். இதையடுத்து, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ரம்யா கிருஷ்ணன், திரிஷா உள்ளிட்டோர் இந்த வாய்ப்பை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதில், ரம்யா கிருஷ்ணன் அல்லது வேறு யாரேனும் தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.