December 27, 2017
தண்டோராகுழு
ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் இந்தியாவிலே முதல் முறையாக உருவாகியுள்ள ஸ்பேஸ் படம் ‘டிக் டிக் டிக்’.இப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவியின் நிஜ மகன் ஆரவ் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி அவரே தனது டப்பிங் பணிகளையும் மிக விரைவாக அசத்தலாக செய்து முடித்துள்ளார்.
இது குறித்து ஜெயம் ரவி, “தந்தையாக மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்கு காரணமான சக்தி சவுந்தர் ராஜனுக்கு மிகவும் நன்றி” என்று கூறியுள்ளார்.மேலும், இயக்குநர் மோகன் ராஜா, பெரியப்பாகவாக நானும் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.