November 17, 2017
தண்டோரா குழு
ஜிகர்தண்டா, கபாலி, காலா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் நேற்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். அப்போது சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
மேலும் ஒரு போலீஸ் அதிகாரி இவரிடம் மிகவும் கடினமான முறையில் பேசியுள்ளார். இது குறித்து சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இது எனக்கு எட்டாவது முறையாக நடந்துள்ளது. தோற்றத்தை வைத்தே ஒருவரை பற்றி சந்தேகப்படுவது நிறுத்த வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.