August 16, 2018
தண்டோரா குழு
கனமழையால் பாதிக்கபட்டு வரும் கேரள மாநிலத்திற்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.கனமழை காரணமாக இதுவரை 8,316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள அரசுக்கு தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் இதுவரை நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில்,முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் விஷால் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.