September 10, 2018
தண்டோரா குழு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி,த்ரிஷா,சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.லக்னோவில் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடப்பதை அடுத்து,ரஜினிகாந்த் பாதுகாப்புக்கு 25 போலீஸ்காரர்களை லக்னோ போலீஸ் உயர் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.மேலும்,படப்பிடிப்பின் போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.இதற்காக செல்போனுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் வாரணாசி,சன்பாந்தராவிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.