November 17, 2018
தண்டோரா குழு
ஐதராபாத்தில் கட்டப்பட்டியிருக்கும் மகேஷ் பாபுவின் திரையரங்கை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைக்க இருப்பதாகவும்,அந்த திரையரங்கில் முதல் படமாக 2.0 படத்தை திரையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ்பாபு ஐதராபாத்தில் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து மிகப் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை நிறுவிஉள்ளார்.ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தானை வெளியிட்டு தொடக்க விழாவிற்கு அமீர் கானை வரவழைக்க ஏற்பாடு நடந்தது.
ஆனால் அமீர் கான் பிசியாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.இந்நிலையில்,இந்த திரையங்கில் ரஜினியின் 2.0 படம் திரையரங்கினில் முதல் படமாக வெளியிடப்படவுள்ளது.இதையடுத்து,இதன் தொடக்க விழாவிற்கு ரஜினியை அழைத்திருக்கிறார்கள்.2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினி இதில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.