December 4, 2017
kalakkalcinema.com
தல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க கூட்டணி அமைத்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஸ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.