May 10, 2018
தண்டோரா குழு
மலையாளத்தில் வெளியான பிரேமம்’ படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி.தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார்.தற்போது அவர் தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,மாரி2 படக்குழுவினருடன் சாய் பல்லவி நேற்று கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.மேலும் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.