October 12, 2017
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துள்ள படம் மெர்சல்.இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.ஆனால், படக்குழுவினர்கள் மெர்சல் படத்தின் டிரைலர் வெளியிடும் திட்டம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். படம் வெளியாக ஒரேயொரு வாரம் மட்டும் இருப்பதால் இப்படத்தின் மீதமுள்ள போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இதனால், மெர்சல் டிரைலரை உருவாக்க நேரமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில்,இப்படத்தின் புரோமோ வீடியோ அல்லது மெர்சல் ஸ்டில்ஸ் போன்றவை
தீபாவளி வரை தினமும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.