January 6, 2018
kalakkalcinema.com
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தினம் தினம் பல மடங்கு அதிகரித்து கொண்டே இருக்கின்றன, ரசிகர்களுக்கு விஸ்வாசம் பீவர் அதிகமாகத் தொடங்கி விட்டது.
இந்த படத்திற்கு முதலில் யுவன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, பின்னர் யுவன் விலகி கொண்டதாக செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனையடுத்து அனிருத் அல்லது விக்ரம் வேதா புகழ் சாம் இசையமைக்கலாம் என கூறப்பட்டது.

இதனால் ரசிகர்கள் பலர் ஷாமிற்கு ட்விட்டரில் தல ரசிகர்கள் வாழ்த்துகளை கூறத் தொடங்கியுள்ளனர். இதனை குறித்து ஷாம் அவரது ட்விட்டரில் நான் விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்கிறேன் என வாழ்த்துக்கள் கூறுகிறார்கள், எனக்கும் ஒன்றும் புரியவில்லை, உண்மையில் நான் தலயின் தீவிர ரசிகன். எதிர்காலங்களில் நிச்சயம் தல படங்களுக்கு பின்னணி இசை கொடுப்பேன், விரைவில் நல்ல செய்தி வரும் என கூறி விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்கவில்லை என கூறியுள்ளார்.