November 20, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான டோரா,அறம்,கோலமாவு கோகிலா,இமைக்கா நொடிகள் போன்ற கதாநாயகியை மைய்யமாக கொண்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாரா தற்போது ஐரா,விஸ்வாசம்,சயீரா நரசிம்ம ரெட்டி,கொலையுதிர் காலம்,எஸ்.கே.12 என பிசியாக நடித்து வருகிறார்.இதில் கொலையுதிர் காலம் படத்தை அஜித்தின் பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார்.நீண்ட நாட்களாக உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறியுள்ள படக்குழு,படம் 2019-ம் ஆண்டு ஜனவரி26 ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
பூஜா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ‘ஹஷ்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.