January 11, 2018
தண்டோரா குழு
டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘அருவி’.
பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற இப்படம், ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதுமட்டுமின்றி, முன்னணி திரையுலக நட்சத்திரங்களும் இப்படம் குறித்து தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஹீரோயினாக அறிமுக நாயகி அதிதி பாலன் நடித்திருந்தார். அவரது அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் அவரது நடிப்பை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் நாயகி அதிதி பாலன் இருவரையும் இயக்குநர் பாலா சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து அதிதி பாலா டுவீட் செய்துள்ளார். அதில்,என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பெரிய இயக்குநரின் வாழ்த்தைப் பெற என்ன தவம் செய்தேன்.! இந்தச் சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அன்பும் நன்றியும் பாலா சார் எனக் கூறியுள்ளார்.