November 25, 2017
தண்டோரா குழு
‘நேரம்’,’ப்ரேமம்’ படங்களில் நடித்த மலையாள முன்னணி ஹீரோ நிவின் பாலி, தற்போது தமிழில் ‘ரிச்சி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருந்தது.
கன்னட படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் வெற்றியை பொறுத்து தான் தமிழில் தனது பட வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படும் என்று நிவின் பாலி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், “இந்த படம் ஹிட் ஆனால் தான் இயக்குனர்கள் எனக்கு கால் செய்வார்கள், ஒருவேளை பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்” எனவும் கூறியுள்ளார்.ரிச்சி படம் வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.