October 26, 2017
தண்டோரா குழு
மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி ஷங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னதிரையில் நடித்து வந்த ப்ரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
ஏற்கனவே, அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாதபடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக வனமகன் படத்தில் நடித்த சாயிஷா நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக ப்ரியா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.