October 31, 2017
தண்டோரா குழு
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பாதியில் வந்தாலும் கடைசி வரை இருந்து அனைவரையும் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண்.
அதைப்போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஓவியாவை அடுத்து அதிக ரசிகர்களின் ஆதரவு இருப்பது ரைசாவிற்கு தான். இருவரும் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த போதே நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் தற்போது இருவரும் திரையில் ஜோடியாகியுள்ளனர்.

ஆம், ஹரிஷ்-ரைசா நாயகன், நாயகியாக நடிக்கும் படம் ஒன்றை இளன் என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘கிரகணம்’ என்ற திகில் படத்தை இயக்கியவர்.
காதல், காமெடி படமாக அமையவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.