November 12, 2018
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில காட்சிகள் இருப்பதாகவும் அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி படத்திற்கு அதிமுகவினர் தெரிவித்து தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைப்போல் திரையங்கிகளில் வைக்கப்பட்டுள்ள விஜய்யின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து,படத்தில் இடம் பெற்ற இலவச பொருட்களை எரிப்பது தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில்,சர்கார் திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.இதில் நடிகர் விஜய்,இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,நடிகைகள் கீர்த்தி சுரேஷ்,வரலட்சுமி,பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இசையமைப்பாளர் ரகுமான் தமது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இதில் வெட்டப்படும் கேக் ஒன்றில் அரசு வழங்கிய இலவசப் பொருட்களான மிக்சி,கிரைண்டர்,மின்விசிறி ஆகியவற்றைப் போன்ற சிறிய உருவங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.