November 3, 2018
தண்டோரா குழு
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகி உள்ளது.இந்தப் படத்தில் எமி ஜாக்ஷன்,அக்ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில்,ரஜினி,இயக்குநர் ஷங்கர்,ஏ.ஆர்.ரஹ்மான்,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய அக்ஷய் குமார்,
“எனது உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் 2 மணிநேரம் பயிற்சி பெற்று வந்துருக்கேன் என தமிழில் வணக்கம் சென்னை மகிழ்ச்சி.பாலிவுட் நடிகரான நான் புகழ்பெற்ற ரஜினி சார்,ஷங்கர் சார்,ஏ.ஆர். ரஹ்மான் சாருடன் பணியாற்றுவது ஒரு பெரிய அரிய வாய்ப்பு மகிழ்ச்சி என தமிழில் பேசி அசத்தினார்.
பின்னர்,2.0 படத்திற்கு மேக் அப் போட்டது போல் நான் வேறு எந்த படத்திற்கும் மேக் அப் போட்டது கிடையாது.என் ஆயுளுக்கான மேக் அப்பை இந்த படத்தில் நான் போட்டுவிட்டேன்.மேக் அப் போட 3 மணி நேரம்,மேக் அப் கலைக்க 1.5 மணி நேரம் ஆகும்.அத்தனை வலிக்கும் இந்த படத்தில் பதில் இருக்கிறது.2.0 ஒரு பாடம்.இந்த படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.ஷங்கர் இயக்குநர் மட்டுமல்ல அவர் ஒரு விஞ்ஞானி.அந்த அறிவு ஜீவியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்”.இவ்வாறு பேசினார்.