September 19, 2018
தண்டோரா குழு
சசிகுமார் நடிக்க இருக்கும் புதிய படத்தில்,அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.
நடிகர் சசிகுமாரை வைத்து ‘சுந்தர பாண்டியன்’ என்ற படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன்.கடந்த 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் எஸ்.ஆர்.பிரபாகரன்.
‘கொம்பு வச்ச சிங்கம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.மேலும்,இப்படத்தில் ‘பிக் பாஸ்’ ஆரவ்,சூரி,யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.