August 9, 2018
தண்டோரா குழு
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் இயக்குநர் ராஜமௌலி.இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கியுள்ளார்.
இதற்கிடையில்,இயக்குனர் ராஜமௌலியை சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் சந்தித்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.அதன் மூலம் அவர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில்,இது குறித்து தற்போது சசிகுமார் விளக்கமளித்துள்ளார்.அதில் அவர்,”நான் ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கவில்லை.நான் இயக்கவுள்ள வரலாற்று படத்தின் டிஸ்கஷனுக்காகவே அவரை சந்தித்தேன்” என்று கூறியுள்ளார்.