May 17, 2018
தண்டோரா குழு
அதர்வாவின் செம போத ஆகாதே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி,அனைகா சோதி நடித்துள்ளனர்.அர்ஜய்,ஜான் விஜய்,கருணாகரன்,எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா,பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதன்படி படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.பானா காத்தாடி படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் – அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.