September 24, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.கடந்தாண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் அட்லியின் ‘மெர்சல்’.இப்படம் உலக அளவில் வெற்றி பெற்றது.இப்படத்திற்காக விஜய் சர்தேச விருதையும் பெறவுள்ளார்.இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘சர்கார்’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில்,நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.‘ஜங்க்ஷன்’ என பெயரிடப்பட்ட இக்குறும்படத்தின் டீசர் ரிலீஸாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மேலும்,இந்த குறும்படத்தின் இயக்குநரும் சஞ்சய் தானாம்.ஏற்கனவே,‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் விஜய்யுடன் சேர்ந்து சஞ்சய் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.