January 8, 2018
தண்டோரா குழு
சித்தார்த் தயாரித்து நடித்து அண்மையில் வெளியான படம் அவள். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், சித்தார்த் இப்படத்தை இணையத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் அவர், “திரையரங்கில் பார்க்காமல் விட்டவங்க இந்த தளத்தில் பாருங்க” என்று கூறியிருந்தார்.
அதற்கு ஒரு ரசிகர் “தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டது இல்ல” என்று பதிலுக்கு ட்விட் செய்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தார்த், “உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்.. நீ பாரு” என்று கோபமாக பதிலளித்துள்ளார்.