September 6, 2018
தண்டோரா குழு
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் `96′,`சூப்பர் டீலக்ஸ்’,`ஜூங்கா’,`சீதக்காதி’,`சயீரா நரசிம்ம ரெட்டி’,`செக்க சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.இதுதவிர ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் படம்,மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்கிடையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம்,தம்மன்னா நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான படம் ஸ்கெட்ச்.இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் சந்தர்,விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார்.இப்படத்தை விஜயா வாஹினி ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.