December 28, 2017
tamil.samayam.com
சமீபத்தில் வெளியான வேலைக்காரன்’ பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே ஊடகங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. குறிப்பாகசினேகாவின் கேரக்டருக்கு பாராட்டுமழை குவிந்தது. ஆனால் சினேகா இந்த படத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தம் 18 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் என் கேரக்டருக்காக 7 கிலோ உடல் எடையை குறைத்தேன். ஆனால் படத்தில் என்னுடைய காட்சி வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. மேலும் எடை குறைத்தல் காட்சியில் என்னை சரியாக காட்டவில்லை. உண்மையிலேயே எனக்கு இந்த படம் அதிருப்தியை தந்துள்ளது. வெறும் ஐந்து நிமிட காட்சிகளுக்காக என்னை இவ்வளவு கஷ்டப்படுத்தினீர்கள்” என்றுமோகன்ராஜாவை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் நடிகை சினேகா.