January 5, 2018
தண்டோரா குழு
வென்னணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டோ காமெடி மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி.இவரது மகனான சர்வான் சுசீந்திரன் இயக்கத்தில் ஏஞ்சலினா என்ற படத்தில் நடித்துள்ளாராம்.
இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது,இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்த நிலையில், சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஏஞ்சலினா படம் மூலம் சூரியின் மகன் சர்வான் சினிமாவில் அறிமுகமாகிறான் என்று பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சுசீந்திரனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.