August 15, 2018
தண்டோரா குழு
AAA படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வந்த சிம்புவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்,சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண்-சமந்தா-பிரணிதா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அட்டரின்டிகி தரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாம்.2019 ஜனவரியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நாயாகியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் தான் இப்படத்தில் நாயாகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.