December 27, 2017
தண்டோரா குழு
ஆபாச நடிகையான சன்னிலியோன் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமானார்.
இந்நிலையில், சன்னிலியோன் முதன் முறையாக தமிழில் கதாநாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகவுள்ளது.
வடிவுடையான் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் 27ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து தற்போது இப்படத்திற்கு ” வீரமாதேவி ” என்று பெயர் வைகப்ட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
