May 11, 2018
தண்டோரா குழு
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தை தொடர்ந்து சூர்யா,தனது அடுத்த படத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.சூர்யாவுடன் முதல் முறையாக மோகன்லால் இணைந்து நடிக்க உள்ளதால் சூர்யா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.