January 13, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்களில் சூர்யா, விக்ரம் இருவரும் அடங்குவர். பொங்கலை முன்னிட்டு விக்ரமின் ஸ்கெட்ச் படமும், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், இருவரும் தங்களது படத்தை முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தனர். அப்போது இருவருமே காசி தியேட்டரில் ஒரே நேரத்தில் சந்தித்து உள்ளனர். இதையடுத்து, இருவரும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர், இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது அந்த புகைப்படத்தை சூர்யா, விக்ரம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து
வருகின்றனர்.