September 10, 2018
தண்டோரா குழு
இந்திய சினிமா உலகில் முன்னணி நாயகியாகவும் பாலிவுட் திரையுலகின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது.இந்நிலையில்,தற்போது நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்க அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.பாலிவுட் இயக்குநர் யாஷ் சோப்ரா 1995லிருந்து சுவிட்சர்லாந்தில் தனது பல படங்களை இயக்கியும் தயாரிக்கவும் செய்திருந்ததால் அந்நாட்டு அரசு அவருக்கு கடந்த 2016ம் ஆண்டு சிலை அமைத்தது.
அந்த வகையில்,ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.இது இந்தியாவில் மட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்திலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.இதையடுத்து,ஸ்விட்சர்லாந்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பெர்ன்நகரில் சிலை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.