February 24, 2017
tamilsamayam.com
சண்டை காட்சிகளில் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பது நடிகர் அஜித் குமார்தான்’ என நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘முப்பரிமாணம்’ திரைப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகிறது.இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளதால்,ஸ்டண்ட் காட்சிகளில் சாந்தனு மிகவும் சிரத்தை எடுத்து நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.படத்தின் டிரைலரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,சண்டை காட்சிகளுக்காக சாந்தனுவை பாராட்டினாராம்.
இந்நிலையில் ஸ்டண்ட் காட்சிகள் தான் சிறப்பாக செயல்பட முன் மாதிரியாக இருந்தது அஜித் தான் என சாந்தனு கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,”முப்பரிமாணம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் ,டூப் போடாமல் இரண்டு மடங்கு உழைப்பை அளித்துள்ளேன்.இதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது தலதான்..!” என சாந்தனு தெரிவித்துள்ளார்.