January 23, 2018
kalakkalcinema.com
தளபதி விஜய் கத்தி, துப்பாக்கி படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை செய்ய க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இந்த படத்தில் இன்னொரு ஹீரோயின் கேரக்டரும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் வனமகன் பட ஹீரோயின் சயிஷா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் கசியத் தொடங்கியுள்ளது.
கசிந்துள்ள இந்த தகவல்கள் உண்மை தானா? என்பதை அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.