November 27, 2018
தண்டோரா குழு
சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ள படம் தளபதி 63.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில்,இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா,நயன்தாரா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டது.இறுதியாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிறகு 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நயன்தாரா நடிக்கவுள்ளார்.தற்போது இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற ஜனவரி மாதம் துவங்கவுள்ளனர்.
இந்நிலையில்,இதில் முக்கிய வேடத்தில் ‘மேயாத மான்’ புகழ் இந்துஜா நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.மேலும்,படத்தில் அவர் விஜய்க்கு தங்கையாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.எனினும்,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.