January 6, 2018
தண்டோரா குழு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.
இப்படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடலில் வரும் “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரி குறிப்பிட்ட கட்சியை கிண்டல் செய்வது போல் உள்ளது என்று அதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் நேற்று புகார் அளித்திருந்தார்.
இதனை பார்த்த நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “படத்தை தாண்டி நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கிறது. தற்போது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு போய் முதலில் உதவுங்கள்” என பதிவு செய்துள்ளார்.