January 12, 2018
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்று, பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் ஜூலி.
இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அந்த படத்திற்கு உத்தமி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ‘கே7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.