October 23, 2017
தண்டோரா குழு
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சாமி படத்தைத் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களாக இயக்கி வந்த ஹரி, தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலும் விக்ரம் ஆறுச்சாமி கேரக்டரிலேயே நடிக்கிறார்.முந்தைய கதையின் தொடர்ச்சியாகவே ‘சாமி 2’ கதையும் அமைந்திருப்பதாகப் கூறப்படுகிறது.
மேலும், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷாவுடன் இணைந்து மற்றொரு நாயகியாக இப்போது கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.வில்லன் வேடத்தில் நடித்த கோட்டா சீனிவாசராவ் மகனாக பாபி சிம்ஹா வில்லன் வேடத்தில் நடிக்கிறாராம். இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இதற்கிடையில் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில்,கருத்து வேறுபாடுகள் காரணமாக, சாமி 2 படத்தில் இருந்து தான் விலகி கொள்வதாக நடிகை த்ரிஷா திடீரென ட்வீட் செய்துள்ளார். மேலும்,சாமி 2 படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.