August 1, 2018
தண்டோரா குழு
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் அதே தேதியில்,அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், ‘கே புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பியார் பிரேம காதல்’ படமும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் பிக் பாஸ்’ போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடியாக நடித்துள்ளனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.