August 15, 2018
தண்டோரா குழு
இயக்குநர் வெற்றிமாறன்,நடிகர் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன்,ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘வட சென்னை’ படத்திற்காக மூன்றாவது முறையாக இணைத்துள்ளது.
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில்ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர், கிஷோர்,சமுத்திரக்கனி,டேனியல் பாலாஜி,பவன்,ராதா ரவி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது.இந்நிலையில்,வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரத்தை தனுஷ் அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா புகைப்படத்துடன் போஸ்டர் ஒன்றரை வெளியிட்ட தனுஷ் வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா சந்திரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.