August 11, 2018
தண்டோரா குழு
சென்னை – 28 இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வரும் படம் ‘பார்ட்டி’.இப்படத்தில்,சத்யராஜ்,ஜெயராம்,நாசர்,சம்பத்,ஜெய்,‘மிர்ச்சி’ சிவா,‘கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன்,ரெஜினா,சஞ்சிதா ஷெட்டி,நிவேதா பெத்துராஜ்,ஷாம் என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு சிம்பு வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு மாநாடு என பெயரிடப்பட்டுள்ளது.தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,இப்படத்தில் சிம்பு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,இப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.