November 17, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக கதை திருட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.இந்நிலையில்,கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் திமிரு பிடிச்சவன்.இப்படம் நேற்று வெளியானது. இதற்கிடையில்,இப்படத்தின் கதை கரு என்னுடையைது என பிரபல க்ரைம் ஸ்டோரி மன்னன் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜேஷ் குமார் தனது முகநூல் பக்கத்தில்,
“இவர்கள் திருந்தவே மாட்டார்களா? சென்ற வருடம் நான் oneindiaவில் எழுதிய ஆன் லைன் தொடர் ஒன்+ஒன் =ஜீரோ தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து
‘திமிரு பிடித்தவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.