November 14, 2018
தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் சர்கார் நடித்தார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை AGS நிறுவனம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.இதையடுத்து,இன்று மாலை விஜய் 63 படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,தற்போது விஜய் 63 படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்படத்தை AGS நிறுவனம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.அதைபோல் மெர்சல் படத்தின் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது.மெர்சல் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்,பாடலாசிரியர் விவேக்,ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
மேலும், முக்கிய வேடத்தில் நடிகர் விவேக் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளியன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் அட்லி கூட்டணியில் தெறி,மெர்சல் என இருபடங்களும் மாபெரும் பெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.