அட்லியின் அடுத்த படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் முறுக்கு மீசையுடன் விஜய் நடித்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இந்த கெட்-அப் படத்தில் உள்ள மூன்று கெட்-அப்களில் ஒன்று என்று தெரியவந்துள்ளது. படக்குழுவினர் தெரிவித்த தகவலின்படி கிராமத்து மனிதராக இரண்டு கெட்அப்பிலும், ஸ்டைலான நபராக ஒரு கெட்டப்பிலும் விஜய் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் இந்த மாத இறுதியில் ஷூட்டிங் நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் லண்டனிலும், அமெரிக்காவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது சென்னை ஷூட்டிங்கில் முறுக்கு மீசை கெட்டப்பில் விஜய் நடித்துவருகிறார். மற்ற இரண்டு கெட்டப் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது