December 22, 2017
cinepettai.com
IMDB usersன் 2017 சிறந்த 10 இந்திய படங்களை வெளியிட்டுள்ளது. அதில் தமிழில் தளபதி விஐய் நடிப்பில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த மெர்சல் திரைப்படம் 9வது இடைத்தையும்,விஐய்சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த இந்த வருடத்தின் மிகப்பெரிய பாளாக் பஸ்டர் விக்ரம் வேதா முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பிரபல காமெடி நடிகர் விவேக் இந்த படக்குழுவினரை வாழ்த்தி தனது டிவிட்டர் பதிவில்,“10 சிறந்த இந்தியப் படங்களில் விக்ரம்வேதா முதலிடம்! பாராட்டுக்கள். மெர்சல் இடம் பெற்றிருப்பதும் தமிழுக்குப் பெருமையே! ”
என பதிவிட்டுள்ளார்.