January 8, 2018
தண்டோரா குழு
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தம்மன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்கேட்ச். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வரும் விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், சாமி2 என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இவர் ராவணன் படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார்.
இப்படத்தை ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ளார், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு மஹாவீர் கர்ணா என்று தலைப்பு வைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் சரித்திரக்கதையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.