• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடையில்லை– உயர்நீதிமன்றம்

August 9, 2018 தண்டோரா குழு

விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரி பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்வழக்கை தள்ளுபடி செய்தது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’.கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா,ராகுல் போஸ்,பூஜாகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ்,இந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில்,இப்படத்திற்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமீட் சாய் மீரா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.படம் உருவாகாத நிலையில் வாங்கிய சம்பளத்தையும் கமல் திரும்ப அளிக்கவில்லை.எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும்,அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என கோரியுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது கமல் தரப்பில் விளக்கமளிக்க நீதிபதி உத்திரவிட்டார்.இதையடுத்து கமல் தரப்பில்,பிரமீட் நிறுவனத்திடம் 4 கோடி ரூபாய் மட்டுமே பெற்றார்.ஆனால்,படத்தை தயாரிக்க அந்நிறுவனம் முன்வரவில்லை எனவே வேறு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் சாய்மீரா நிறுவத்திற்கு பணத்தை திரும்ப தந்து விடுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில்,இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,ராஜ்கமல் நிறுவனம் ரூ.5.44 கோடி பாக்கி வைத்துள்ளதாக பிரமிட் சாய்மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க