February 11, 2017
findmytemple.com
‘பாகுபலி’ பட இயக்குநர் ராஜ மெளலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பாகுபலி படத்தின் மூலமாக இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ராஜமெளலி,தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்து விட்டார்.பாகுபலி இரண்டாம் பாகம்,ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு,பிரம்மாண்டமான முறையில் எடுக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தில் கதாநாயர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,மோகன் லால் மற்றும் அமீர்கான் ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வராவிட்டாலும்,ராஜமெளலியின் தந்தையான விஜேந்திர பிரசாத்,மறைமுகமாக மகாபாரதம் படம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார்.தற்போது மகாபாரதம் படத்திற்கான கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் ராஜ மெளலி,பாகுபலி வீடியோ கேம் உருவாக்கத்திற்காகவும் பணியாற்றி வருகிறார்.