• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கங்கை அமரனுக்கு ஆதரவளிக்கவில்லை: யுவன் ஷங்கர் ராஜா

March 24, 2017 tamilsamayam.com

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவளிக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் போட்டியிடும் கங்கை அமரன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரபல ஆடை வடிவமைப்பாளரும், இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கரின் மகளுமான வாசுகி பாஸ்கர் பகிர்ந்த டுவீட்டில், தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் இணைத்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தான் இதற்கு ஆதரவளிக்கவில்லை என டுவிட்டரில் தெரிவித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த டுவீட் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வாசுகி அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.

இதனிடையே, பாஜக வேட்பாளரான கங்கை அமரன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அவரது அரசியல் பயணத்திற்கான திட்டம் என்றும் பலவேறு வதந்திகள் உலா வந்தன. இதனால், சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என டுவிட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க